குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2045

இன்று 2014, மார்கழி(சிலை) 20 ம் திகதி சனிக் கிழமை .

இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணை நிலைநிறுத்தம்.வடக்கு கிழக்கு மீள்குடியேற்றப் பணிகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - இந்தியா -இந்தியத்

தொட்டிலை ஆட்டபசில் சீனாப்பிள்ளையைக் கிள்ளிவிட கொத்தா உலகத்தொட்டிலை ஆட்ட பீரிசு?- மக்கள் நலன்பேணும் அரசு என்றால் தமிழ்விவசாயிகளிடமிருந்து அல்லவா பொருட்களை இராணுவம் நியாய விலையில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்திருக்கவேண்டும் அப்படிச் செய்திருந்தால் அது நல்லிணக்கத்திற்கு மேல்நல்லிணக்கம் எனலாம்.

23.08.2012  இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் ஆசியாவின் சகல முக்கிய நிலைகளையும்தாக்கக் கூடிய வகையில் இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

அக்னி ரக ஏவுகணையே இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, கம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க,மத்தள, ரத்மலானை விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல்மின்நிலையம், களனிதிசுச, கெரவல பிட்டிய மின்நிலையங்கள் போன்றவற்றை இலக்குவைத்து இவ்வாறு ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

 

இந்தத் தகவல்களை வழங்கிய இந்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரி அம்ரீட் அவுவாலியா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மிஸைல்டொட் கொம் என்ற இணைய தளத்தை பராமரித்து வரும் கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட அமெரிக்கநிறுவனமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

 

தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்தி இந்தியா, இலங்கையிடமிருந்து பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும்அதேவேளை, சீனா முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதனையும் தடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

 

இலங்கையூடான சீனாவின் விநியோக வழிகளைதடுப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இரகசிய திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

 

இதேவேளை, இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராலய முதலாம் நிலை செயலாளர் அனுராக் சிறிவட்சரா பாலியல் துஸ்பிரயோகசம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

வடக்கு கிழக்கு மீள்குடியேற்றப் பணிகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - இந்தியா  -இந்தியத்தொட்டிலை ஆட்டபசில் சீனாப்பிள்ளையைக் கிள்ளிவிட கொத்தா உலகத்தொட்டிலை ஆட்ட பீரிசு?

23 .08. 2012  வடக்கு கிழக்கு மீள்குடியேற்றப் பணிகளுக்கு பூரணஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குபகுதிகளில்; மீள் குடியேற்றம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக உதவிகளை விஸ்தரிக்கதிட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கத்தின் கலச்சார, வீடமைப்பு மற்றும் வறுமைஒழிப்பு அமைச்சர் குமாரி செல்யா தெரிவித்துள்ளார்.

 

இந்திய ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, இந்தியாவினால் வழங்கப்பட்டு வரும்ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

மரக்கறிச் சந்தையில் இராணுவத்தினரும் புகுந்து கொண்டதால் வடக்கு விவசாயிகள் கடுமையாகப் பாதிப்பு மக்கள் நலன்பேணும் அரசு என்றால் தமிழ்விவசாயிகளிடமிருந்து அல்லவா பொருட்களை இராணுவம் நியாய விலையில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்திருக்கவேண்டும் அப்படிச் செய்திருந்தால் அது நல்லிணக்கத்திற்கு மேல் நல்லநோக்கமாகும்.

23 .08. 2012  மரக்கறிச் சந்தையில் இராணுவத்தினரும் புகுந்து கொண்டதால் தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பலாலி இராணுவத் தளத்தை அண்டிய பகுதியில் படையினர் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மரக்கறிச் செய்கையையும் பெருமளவில் மேற்கொண்டுள்ளனர்.

 

இங்கு பயிரிடப்பட்ட மரக்கறிகள் முன்னர் தெற்கில் உள்ள இராணுவத் தளங்களுக்கும் சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால திடீரென இப்போது அச்சுவேலியில் ஆங்காங்கே வாகனங்களில் கொண்டு வந்து மரக்கறிகளை விற்க ஆரம்பித்திருக்கின்றனர் படையினர்.

 

இவர்களின் இந்த நடவடிக்கையால் தாம் உற்பத்தி செய்த மரக்கறிகளைச் சந்தைப்படுத்த முடியாமலுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.  இராணுவத்தினர் வாகனங்களில் மரக்கறிகளைக் கொண்டு வந்து இடைக்காடு, தம்பனை, வளலாய் ஆகிய இடங்களில் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

 

 

இதனால் மக்கள் அச்சுவேலிச் சந்தைக்கு வருவதை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. நாம் சந்தைக்குக் கொண்டு செல்லும் மரக்கறிகளைத் தரகர்களிடம் மிகக் குறைந்த விலைக்குத் தள்ளிவிட்டுத் திரும்ப வேண்டி இருக்கிறது என விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

மரக்கறி விற்பதற்காக காலையில் 7 மணிக்கே இராணுவத்தினர் வந்துவிடுவார்கள் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.  சிலவேளைகளில் சந்தி சந்தியாக நின்று மரக்கறி வாங்குங்க என அவர்கள் கூவிக்கூவி விற்பார்கள் என குடும்பப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

 

அரசிடம் சம்பளம் பெறும் இராணுவத்தினர் அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

தமிழா, தமிழனாக இரு! தமிழா, இனவுணர்வு கொள்!

14.04.2012-கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லு வதோ ஆச்சரியமான ஒன்றல்ல!

 
இரவல் இராயதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா? -இதயச்சந்திரன்

19.02.2012-தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர்.

 
வன்னி அவலம் --3 தேவாவின் உண்மை ஓலம்.

வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது.

ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.

 அல்லது பிச்சை எடுக்கிறார்கள்.

 
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

 

கட்டுரைகள்

பட்டுவேட்டியை மைத்திரி தரப்போவதில்லை – கட்டி இருக்கும் கோவணத்தையாவது மகிந்த உருவக் கூடாது அல்லவா....

நடராயா குருபரன்:-2005ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் போர் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்...முசுலீம் காங்கிரசை பல குழுக்காளாக உடைத்தார் - ஜேவீபியை 3 பிரிவுகளாக தகர்த்தார் - மலையகக் கட்சிகளை சிறு சிறு குழுக்களாக பிரித்தெடுத்தார்... ஐக்கியதேசியக் கட்சியில் இருந்து 67 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கினார். பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் உருவாக்கி  அனைத்து சனநாயக விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைக்கும் சட்ட திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலம் தனி நபர் சர்வாதிகார ஆட்சியை குடும்பத்தின் துணையுடன் நிறுவினார்.... அம்பாறை பியசேனவைத் தவிர கூட்டமைப்பை மட்டும் உடைக்க முடியாது விழிபிதுங்கினார்....

​மேலும் வாசிக்க...
 
தமிழ்- முசுலிம் வாக்களிப்பு!

தேர்தல் சட்டங்களின் மீறல், அவதூறுகளை பேசும் அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று இலங்கையின் தேர்தல்கள் வழமையாகக் கொண்டிருக்கும் அனைத்து அத்துமீறல்களையும் இந்த சனாதிபதித் தேர்தலும் பிரதிபலித்து வருகின்றது.

​மேலும் வாசிக்க...
 

இந்திய செய்திகள்

20.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதவாத கொள்கையை முறியடிப்போம்: கருணாநிதி

சென்னை: மதம், கடவுள் பெயரால் நடைபெறும் மதவாத கொள்கையை முறியடிப்போம் என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சென்னை சாந்தோமில்

தொடர்ந்து வாசிக்க..

19.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அஞ்ஞாடிக்கு சாகித்ய அகாடமி விருது

திருநெல்வேலி: நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி புதினத்திற்கு இந்த ஆண்டுக்கான சாகித்யஅகாடமி விருது

தொடர்ந்து வாசிக்க..


18.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

வாய்பாய்க்கு பாரத ரத்னா விருது?

புதுடில்லி : முன்னாள் பிரதமர் வாய்பாய்க்கு அவரது பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி அன்று பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க மத்திய அரசு

தொடர்ந்து வாசிக்க..